ADDED : மார் 17, 2026 04:48 AM
குளித்தலை: குளித்தலை அருகே, சேவல் சண்டை நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். மூன்று பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை அடுத்த பில்லுார் பஞ்., பெரிய வீட்டுக்காரன்பட்டி அருகே, கருப்புகோவிலில் சேவல் சண்டை நடைபெறுவதாக, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியளவில் கோவிலை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது சேவல் சண்டை யில் ஈடுபட்ட பில்லுார் குமார், தொட்டியப்பட்டி மணிகண்டன், 29, அதவத்துார் சக்திவேல், 56, ஆறுமுகம், 40, தோகைமலை முத்துக்குமார், 19, பில்லுார் சூர்யா, 33, சோமரசன்பேட்டை மதிவாணன், 50, இவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களிடம் இருந்து 6 சேவல், 3 பைக்குகளை
பறிமுதல் செய்தனர் .
தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேவல் சண்டை நடத்தியதாக, 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்-றனர்.
