/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரு வாகனங்கள் மோதி 7 பேர் படுகாயம்
/
இரு வாகனங்கள் மோதி 7 பேர் படுகாயம்
ADDED : ஜூன் 20, 2025 01:33 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவில், ஆம்னி மற்றும் பொலிரோ பிக்கப் வாகனங்கள் மோதியதில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள வளையாபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு மகன் ஆகாஷ், 20. இவர், மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், காந்திகிராமம் பகுதியை சேர்ந்த துரை பாண்டியன், 32, ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள பிட்டபள்ளாபாளையத்தை சேர்ந்த ராம்குமார், 38, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வெள்ளைப்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து, 52, கரூர் மாவட்டம் காந்திகிராமத்தை சேர்ந்த சரவணன், 46, கரூர் மாவட்டம் தலையூரை சேர்ந்த ஜெகநாதன், 34, ஆகியோருடன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் அரவக்குறிச்சி அருகே தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலையை சேர்ந்த சேகர் என்பவரது மகன் விஜய், 24, திருச்சி மாவட்டம் ஜீயபுரத்திலிருந்து கேரளா செல்வதற்காக, பொலிரோ பிக்கப் வாகனத்தில் வாழைத்தார் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்தார். தடாகோவில் பிரிவு அருகே வந்தபோது ஆம்னி வேனில் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இரு வாகனங்களிலும் பயணம் செய்த ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். அனைவரையும் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

