தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் 8,268 தபால் ஓட்டுகள் பதிவு

மாவட்டத்தில் 8,268 தபால் ஓட்டுகள் பதிவு

மாவட்டத்தில் 8,268 தபால் ஓட்டுகள் பதிவு


ADDED : மே 01, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 05:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில், 8,268 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இதனை, ஓட்டு எண்ணும் மையத்தில் தனியாக எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடு நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் ஏப்.,23ல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்கு முன்னதாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், போலீசார் தபால் மூலம் ஓட்டு செலுத்தினர். அதன்படி அரவக்குறிச்சி தொகுதியில், 1,747 பேர், கரூரில், 2,417 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 1,934 பேர், குளித்தலையில், 2,170 பேர் என மொத்தம், 8,268 பேர் ஓட்டு செலுத்தினர்.

மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி வரும், 4ல் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி மையத்தில் நடக்கிறது. ஓட்டு எண்ணும் பணி சரியாக காலை 8:00 மணிக்கு துவங்கி, தபால் ஓட்டுகளை எண்ணுவர். 30 நிமிடங்களுக்கு பிறகு அதாவது, 8:30 மணிக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை எண்ணும் பணி துவங்கும். 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் எண்ணப்படும்.

தபால் ஓட்டு எண்ணுவதற்காக, 17 மேற்பார்வையாளர்கள், 30 உதவி

யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தபால் ஓட்டுகளை எண்ணுவதற்கு தேவையான பெட்டிகள் தயார் நிலையில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us