/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கீழவெளியூர் முகாமில் பெறப்பட்ட 828 மனு
/
கீழவெளியூர் முகாமில் பெறப்பட்ட 828 மனு
ADDED : ஆக 11, 2024 02:05 AM
குளித்தலை;குளித்தலை அடுத்த, கல்லடை பஞ்., கீழவெளியூர் மகளிர் சுயஉதவிக்குழு கட்டட வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடந்தது.
பஞ்., தலைவர்கள் கல்லடை ராஜலிங்கம், புத்துார் தணிகாசலம் ஆகியோர் தலைமை வகித்தனர். தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், யூனியன் கவுன்சிலர் சின்னையன், தோகைமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தனி தாசில்தார் மகாமுனி, தலைமையிடத்து துணை தாசில்தார் வைரப்பெருமாள், கூட்டுறவு சங்கங்களின் சார்பதிவாளர் திருமதி, தோகைமலை வருவாய் ஆய்வாளர் முத்துக்கண்ணு ஆகியோர், அனைத்து துறைகளின் மூலம் பொது மக்கள் பயன்பெறும் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினர்.
கல்லடை, புத்துார் பஞ்., மக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, பட்டா பெயர் திருத்தம், பெயர் மாற்றம், விவசாய கடன், வாகன கடன், இலவச தையல் இயந்திரம், பஸ் வசதி, தெரு விளக்கு, கழிப்பிட வசதி கேட்டு, 828 மனுக்கள் பெறப்பட்டது.
துறை சார்ந்த அதிகாரிகள், மனுக்கள் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ., மாணிக்கம் கேட்டுக் கொண்டார்.
கல்லடை, புத்துார் பஞ்., துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள். முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

