/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை வழக்கில் 9 பேர் கைது
/
தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை வழக்கில் 9 பேர் கைது
தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை வழக்கில் 9 பேர் கைது
தாளாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை வழக்கில் 9 பேர் கைது
ADDED : ஆக 22, 2025 01:29 AM
குளித்தலை குளித்தலையில், பள்ளி தாளாளர், மகளை தாக்கி தங்க நகை, பணம் பறித்து சென்ற, முகமூடி கொள்ளையர்கள், 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் கருணாநிதி, ஓய்வு பெற்ற அரசு கல்லுாரி முதல்வர். இவரது மனைவி சாவித்திரி, 65, தனியார் பள்ளி தாளாளர். கடந்த, 18ம் தேதி இரவு இவர்கள் வெளியூர் சென்று விட்டு, இளைய மகள் பல் மருத்துவரான அபர்ணா ஆகியோருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை, 3:00 மணியளவில் முகமூடி அணிந்த மூன்று நபர்கள் ஆயுதங்களால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, ஒன்பது லட்சம் ரூபாய், 31 பவுன் நகையை திருடி, பதிவு எண் இல்லாத காரில் தப்பிச் சென்றனர்.
குளித்தலை போலீசார் விசாரணை செய்ததில், தப்பிச்சென்ற கார் திருச்சி மாவட்டம், துவரங்
குறிச்சி அருகே பழுதாகி நின்றது. டி.எஸ்.பி.,
செந்தில்குமார் தலைமையில் போலீசார் காரை பறிமுதல் செய்து விசாரணையை தொடர்ந்தனர். இதில், கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 35, திருச்சி ஆயுதப்படையில் போலீசாக இருந்து, இரண்டு மாதங்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டவர்.
மேலும் அதே ஊரை சேர்ந்த ரவிசங்கர், 24, ரங்கநாதன், 36, பார்த்திபன், 24, தனியார் சிட் பண்ட்ஸ் உரிமையாளர் முருகேஷ், 34, திருச்சி ஹரிஷ், 24. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த அஜய், 24, பால்பாண்டி, 31, கண்ணன், 29, ஆகியோரை குளித்தலை தனிப்படை போலீசார் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ஜெயராமன், கோபி தலைமையில் எஸ்.ஐ.,க்கள் சரவணகிரி, குமரவேலு மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர். குளித்தலை ஒருங்கிணைந்த குற்ற
வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளை வழக்கில், மேலும் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.