/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி
/
இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி
இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி
இளைஞர் ஓட்டிய பைக் மோதி 90, 80 வயது மூதாட்டிகள் பலி
ADDED : ஜன 18, 2024 02:18 AM
வேலாயுதம்பாளையம்:கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சேமங்கி பெரியார் நகரைச் சேர்ந்தவர் குஞ்சம்மாள், 90. அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள், 80. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சேமங்கியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்கள் வாங்கி, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மரவாபாளையம் மதுரை வீரன்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் குணசேகரன், 19, ஓட்டிய பைக் இருவர் மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு துாக்கி செல்லப்பட்டனர்.
அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, ஏற்கனவே இறந்தது தெரிந்தது. வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.