/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 90.67 சதவீதம் தேர்ச்சி
/
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 90.67 சதவீதம் தேர்ச்சி
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 90.67 சதவீதம் தேர்ச்சி
கரூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 90.67 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:20 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வில், 90.67 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், நேற்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கரூர் மாவட்டத்தில், 4,963 மாணவர்கள், 5,446 மாணவியர் உள்பட, 10 ஆயிரத்து, 349 பேர் தேர்வு எழுதினர். அதில், 4,228 மாணவர்கள், 5,169 மாணவியர் என, 9,397 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி சதவீதம், 90.67. கடந்ததாண்டு பிளஸ் 1 தேர்வில், 92.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
நடப்பாண்டு, 1.67 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதேபோல் கடந்தாண்டு, 15வது இடத்தில் இருந்த கரூர் மாவட்டம் நடப்பாண்டு, 27வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பிளஸ் 1 தேர்வில், 15 தனியார் பள்ளிகளும், மூன்று அரசு பள்ளி
களும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.