/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீர்பள்ளி யூனியன் நடுநிலை பள்ளியில் 95வது ஆண்டு விழா
/
தண்ணீர்பள்ளி யூனியன் நடுநிலை பள்ளியில் 95வது ஆண்டு விழா
தண்ணீர்பள்ளி யூனியன் நடுநிலை பள்ளியில் 95வது ஆண்டு விழா
தண்ணீர்பள்ளி யூனியன் நடுநிலை பள்ளியில் 95வது ஆண்டு விழா
ADDED : பிப் 18, 2024 10:33 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி யூனியன் நடுநிலைப் பள்ளியில், 95 வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
தலைமை ஆசிரியர் லில்லி சகாய சுந்தரி தலைமை வைத்தார். மாவட்ட பஞ்., குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், மாவட்ட அவைத்
தலைவர் ராஜேந்திரன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலர் தியாகராஜன், பஞ்., தலைவர் ரத்தினவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் பரிசு வழங்கி பாராட்டினார்.
ஆசிரியர்கள் பானு, விமலா மேரி, மோகனா, இடைநிலை ஆசிரியர்கள் சச்சிதானந்த சரஸ்வதி, பார்வதி, சித்ரா, உடற்கல்வி ஆசிரியர்
குமரவேல், மேலாண்மை குழு தலைவர் அபிராமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்
பிரபு மற்றும் பலர்
பங்கேற்றனர்.