/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 96.24 சதவீதம் தேர்ச்சி
/
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 96.24 சதவீதம் தேர்ச்சி
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 96.24 சதவீதம் தேர்ச்சி
கரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 96.24 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:19 AM
கரூர் தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. கரூர் மாவட்டத்தில், 5,580 மாணவர்கள், 5,660 மாணவியர் உள்பட, 11 ஆயிரத்து, 240 பேர் தேர்வு எழுதினர். அதில், 5,297 மாணவர்கள், 5,520 மாணவியர் உள்பட, 10 ஆயிரத்து, 817 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 94.93 சதவீதமும், மாணவியர், 97.53 சதவீதமும், மொத்தமாக, 96.24 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு, 93.59 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருந்தனர். நடப்பாண்டு, 2.65 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அதேபோல் கடந்தாண்டு, கரூர் மாவட்டம் மாநில அளவில், 13வது இடம் பெற்றிருந்தது. நடப்பாண்டு, 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கரூர் மாவட்டத்தில், 85 தனியார் பள்ளிகளும், 35 அரசு பள்ளிகளும், 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
அரசு பள்ளி மாணவி, 495 மதிப்பெண்
கரூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், அரசு பள்ளிகளில் சின்னதாராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா, 495 மதிப்பெண் பெற்று முதலிடமும், கரூர் ரங்கநாதன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பாலாஜி, 491 மதிப்பெண் பெற்று, இரண்டாமிடமும், புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அதினா, 487 மதிப்பெண் பெற்று, மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளி
பள்ளப்பட்டி, உஸ்வாஸ்துன் ஹசனா ஒரியண்டல் அரபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ரா யாமின், 490 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், கரூர் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷயா ஸ்ரீ, 487 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், அதே பள்ளியை சேர்ந்த பவித்ரா, 484 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளி
கரூர் மண்மங்கலம் எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துஜா, 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சின்னதாராபுரம் ஆர்.என். மெட்ரிக் பள்ளி மாணவி தீபனா ஸ்ரீ, துளசி கொடும்பு சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவி தீபா தர்ஷினி, பிரியதர்ஷினி, சபீதா, கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சர்வேஸ்வரன், வெண்ணைமலை சேரன் மெட்ரிக் பள்ளி மாணவி தர்ஷனா, எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் பள்ளி மாணவி தர்ஷினி ஸ்ரீ ஆகியோர் தலா, 495 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.
* கரூர் ஈசநத்தம் ஹாஜி மீரா அகாடமி மாடல் மெட்ரிக் பள்ளி மாணவி தீபானா, வெங்கமேடு ஈக்குவிடாஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சுதிக்ஷா, துளசி கொடும்பு சரஸ்வதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆதி சிவன், பி.ஏ. வித்யா பவன் மேல்நிலைப் பள்ளி மாணவி அர்ச்சனா, செல்வ தமிழ், எஸ்.எஸ்.வி.எம்., மெட்ரிக் பள்ளி ஸ்ரீகவி, கரூர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி ஹரிஹரசுதன், தரகம்பட்டி ஸ்ரீ கருணை ராகவாஜி வித்யாலயா பள்ளி மாணவி தனவர்ஷினி ஆகியோர் தலா, 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் இனிப்பு வழங்கல்
கரூர், மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி ஆண்கள் மேல்
நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளையொட்டி, மாணவ, மாணவியர் நேற்று
பள்ளிகளுக்கு வந்தனர். அப்போது, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தங்கள் மொபைல் போனில் மதிப்பெண்களை பார்த்து, இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

