/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி
/
பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி
பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி
பைக்கில் சென்ற கொத்தனார் நாய் குறுக்கே வந்ததால் பலி
ADDED : மே 19, 2025 01:48 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரம், வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 55; கொத்தனார். கடந்த, 12ல் தனக்கு சொந்தமான டூவீலரில் சொந்த வேலையாக சித்தலவாய் - பஞ்சப்பட்டி நெடுஞ்சாலையில், கோவக்குளம் அருகே சென்று-கொண்டிருந்தார்.
அப்போது, நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால், நிலை தடு-மாறி கீழே விழுந்த சிவக்குமாருக்கு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்-லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அவரது தாயார் ஜெகதாம்பாள், 70, கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.