/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்
/
சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்
சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்
சணப்பிரட்டியில் உடைந்த குழாய் சாலையில் வீணாக ஓடிய குடிநீர்
ADDED : ஏப் 07, 2025 02:20 AM
கரூர்: கரூர் அருகே, நேற்று குழாய் உடைந்து, குடிநீர் வீணாக சாலையில் சென்றது.
கரூர் மாநகராட்சிகுட்பட்ட, சணப்பிரட்டி பஞ்., கடந்த, 2011ல், இணைக்கப்பட்டது. அதில், உள்ள வார்டுகளுக்கு புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டில் இல்லை. பழைய திட்டத்தில்தான், சணப்பிரட்டி பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
ஆனால், கடந்த சில நாட்களாக சணப்பிரட்டி பகுதியில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. அதை, தமிழ்-நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளோ அல்லது கரூர் மாநக-ராட்சி நிர்வாக அதிகாரிகளோ கண்டுகொள்ளாமல் உள்ளனர்.கோடைக்காலம் தீவிரம் காட்டும் நிலையில், குடிநீர் தட்டுப்-பாடு ஏற்படாமல் இருக்க, குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என, சணப்பிரட்டி பகுதி மக்கள் எதிர்பார்க்-கின்றனர். எனவே, சணப்பிரட்டியில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்பை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய நடவ-டிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

