/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டும், குழியுமான மாநில நெடுஞ்சாலை
/
குண்டும், குழியுமான மாநில நெடுஞ்சாலை
ADDED : பிப் 08, 2026 06:01 AM
கரூர்; கரூர் -- திண்டுக்கல் மாநில நெடுஞ்சாலையில், வெள்ளியணை பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமான இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்ப-டுகின்றனர்.
கரூர் நகரில் இருந்து, தான்தோன்றிமலை, மணவாடி, வெள்ளியணை, கூடலுார், பாளையம், குஜிலியம்பாறை, கோவிலுார், எரியோடு வழி-யாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் திண்டுக்-கல்லுக்கு செல்கின்றன. ஆனால் மதுரை, திண்-டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு, வாக-னங்கள் வெள்ளியணை சாலையில் செல்வது குறைந்து வருகிறது. இதனால், வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் போது, வெள்ளியணை வழியாக திருப்பி விடப்படுகின்-றன.அப்போது, வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, வெள்ளியணை- திண்டுக்கல் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், வெள்ளியணையில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்-றனர்.
இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், தடுமாறி விழுகின்றனர். குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

