/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., சார்பில் போஸ்டர் ஒட்டிய 4 கூலி தொழிலாளர்கள் மீது வழக்கு
/
அ.தி.மு.க., சார்பில் போஸ்டர் ஒட்டிய 4 கூலி தொழிலாளர்கள் மீது வழக்கு
அ.தி.மு.க., சார்பில் போஸ்டர் ஒட்டிய 4 கூலி தொழிலாளர்கள் மீது வழக்கு
அ.தி.மு.க., சார்பில் போஸ்டர் ஒட்டிய 4 கூலி தொழிலாளர்கள் மீது வழக்கு
ADDED : ஜன 05, 2025 01:44 AM
கரூர், :கரூர் மாநகராட்சியுடன், கிராம பஞ்., க்கள் இணைக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் போஸ்டர் ஒட்டிய, நான்கு கூலி தொழிலாளர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாநகராட்சியுடன், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., ஏமூர் பஞ்., ஆகியவை இணைக்கப்படுவதாக, தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதை கண்டித்து, கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் போஸ்டர் அச்சிடப்பட்டது. அதில், கிராம பஞ்.,க்கள், கரூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதால், 100 நாள் வேலை திட்டம், விலையில்லாத ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டம், விலையில்லா வீடுகள் திட்டம், விவசாய மானியம் திட்டம் பறிபோகும், சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை, காலிமனை வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி பல மடங்கு உயரும், இதனால் இணைப்பை கண்டிக்கிறோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
இந்த போஸ்டர்கள், நேற்று முன்தினம் இரவு ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்.,க்குட்பட்ட வடிவேல் நகர், ஈ.வெ.ரா., ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டது. இதுகுறித்து, அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியதாக, போலீஸ் எஸ்.ஐ., இளங்கோவன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, போஸ்டர் ஒட்டிய கூலி தொழிலாளர்கள் நவீன்குமார், 21, குகன், மோகன்ராஜ், 46; மாயவன், 43, ஆகிய நான்கு பேர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.