/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
/
இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
ADDED : நவ 16, 2024 01:24 AM
இரண்டாவது திருமணம் செய்த
வாலிபர் மீது வழக்குப்பதிவு
கரூர், நவ. 16-
அரவக்குறிச்சி அருகே, மனைவிக்கு தெரியாமல், இரண்டாவது திருமணம் செய்த வாலிபர் மீது, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரது மகன் அப்துல் அமீது சேத், 35; இவருக்கும், சனோபர் பென்சியா, 28; என்ற பெண்ணுக்கும் கடந்த, 2014ல், திருமணம் நடந்தது. இந்நிலையில், குடும்ப தகராறு காரணமாக சனோபர் பென்சியா, கணவர் அப்துல் அமீது சேத்தை பிரிந்து, மேட்டுப்பாளையத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இதனால், அப்துல் அமீது சேத், நஜியா என்ற பெண்ணை கடந்த ஏப்., மாதம் திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த சனோபர் பென்சியா, மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, முதல் மனைவி சனோபர் பென் சியாவுக்கு தெரியாமல், இரண்டாவது திருமணம் செய்த அப்துல் அமீத் சேத், உடந்தையாக இருந்ததாக ஜக்ரியா மவுலானா, 47, ஆகியோர் மீது, கரூர் ரூரல் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரிக்கின்றனர்.