/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கனமழையால் சேதமடைந்துள்ள நுாற்றாண்டு கண்ட கல்லு பாலம்
/
கனமழையால் சேதமடைந்துள்ள நுாற்றாண்டு கண்ட கல்லு பாலம்
கனமழையால் சேதமடைந்துள்ள நுாற்றாண்டு கண்ட கல்லு பாலம்
கனமழையால் சேதமடைந்துள்ள நுாற்றாண்டு கண்ட கல்லு பாலம்
ADDED : அக் 24, 2025 01:23 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுாரில் இருந்து மேட்டுமருதுார், பணிக்கம்பட்டி, நல்லுார், அய்யர்மலை, தோகைமலை மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெடுஞ்சாலை செல்கிறது. கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து, வீரவள்ளி கிராமம் வழியாக கொடிங்கால் வடிகால் வாய்க்கால் வதியம், கோட்டைமேடு, பரளி வழியாகவும், மேலும், வளையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து காட்டுவாரி உருவாகி பணிக்கம்பட்டி, கணக்கப்பிள்ளையூர், ரத்தினத்தான்பட்டி வழியாக இரண்டு வடிகால் வாய்க்கால்களும், மேட்டு
மருதுார் கல்லு பாலத்தில் இணைகிறது.
கருங்கல்லால் கட்டப்பட்ட கல்லு பாலம், 10 மீட்டர் அகலத்தில், 40 மீட்டர் நீளத்தில் இரண்டு மீட்டர் இடைவெளிக்குள் 18 கண்மாய் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது. 100 ஆண்டுகளை கடந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
-மேட்டு மருதுார் சாலையில், கல்லு பாலத்தின் வழியாக அரசு பஸ், தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்கள், டெக்ஸ் தொழில் நிறுவனங்களுக்குரிய வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. பாலத்தின் வழியாக, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குளித்தலை, திருச்சி நகருக்கு செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை
யால், கல்லு பாலத்தல் இரு இடங்களில் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பஸ்கள், வேன்களில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மருதுார் டவுன் பஞ்., சார்பில், விபத்தை தடுக்கும் வகையில் எச்சரிக்கை பலகை மற்றும் பாலத்தில் சேதமான இடத்தில் மணல் மூட்டைகள் வைத்து விபத்தை தடுத்து வருகின்றனர். எனவே இந்த இடத்தில், புதிய பாலம் கட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

