ஆட்டு கறியை நாய் சாப்பிட்டதால் இரு தரப்பினரிடையே மோதல்
ஆட்டு கறியை நாய் சாப்பிட்டதால் இரு தரப்பினரிடையே மோதல்
ADDED : ஜூன் 01, 2026 03:43 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த தழும்பகவுண்டனுாரை சேர்ந்தவர் மணிகண்டன், 30, விவசாய
கூலித் தொழிலாளி. தனது கிராமத்தில் காளியம்மன் கோவில் விழா நடந்தபோது,
உறவினர்களுக்கு விருந்து சமைப்பதற்காக மணிகண்டன் வாங்கி வைத்த
ஆட்டுக்கறியை, அதே ஊரை சேர்ந்த முருகேசன், 30, என்பவருக்கு
சொந்தமான வளர்ப்பு நாய் சாப்பிட்டு விட்டது.
இதனால் ஏற்பட்ட
பிரச்னையில் முருகேசன், அவரது உறவினர் பெரியசாமி, பூபதி மற்றும்
சிலர் சேர்ந்து மணிகண்டனை தகாத வார்த்தையில் பேசி, தடியால் அடித்து
காயப்படுத்தினர். மேலும் அவரது தாய் வீரம்மாளையும், 60, தாக்கினர்.
இதில்
பாதிக்கப்பட்ட மணிகண்டன், வீரம்மாள் இருவரும் கரூர் அரசு
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து
தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசன், பெரியசாமி, பூபதி
மற்றும் சிலர் மீது விசாரித்து வருகின்றனர்.
இதே வழக்கில் பூபதி, 19,
கொடுத்த புகாரின்படி மணிகண்டன், ராஜேந்திரன் ஆகிய இருவர் மீது
தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
