ADDED : பிப் 23, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையை அடைய லிங்கம்நாயக்கன்பட்டி ஊராட்சி சொக்கலாபுரம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த தடத்தில் சொக்கலாபுரத்தில் இருந்து செல்லும் தார் சாலை ஓரம், 300 அடி நீளத்திற்கு, 40 அடி ஆழத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாமல் திறந்த வெளியாக உள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.