/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மனுக்களை மாலையாக அணிந்து வந்த மாற்றுத்திறனாளி
/
மனுக்களை மாலையாக அணிந்து வந்த மாற்றுத்திறனாளி
ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கரூர்: வீடு கட்டித்தர கோரி, மாற்றுத்திறனாளி ஒருவர் மனுக்களை மாலையாக அணிந்து, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வெங்கமேடு, கொங்கு நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு என்பவர், மனுக்களை மாலையாக அணிந்து வந்து மனு கொடுக்க வந்தார். அதில் கூறியிருப்பதாவது: 75 சதவீதம் உடல் பாதிப்பு உள்ள எனக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மனைவி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். வீடு இல்லாததால் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்ததின் அடிப்படையில், ஏமூர் கிராமத்தில், 2022ம் ஆண்டு இடம் ஒதுக்கி ஆணை வழங்கப்பட்டது.
அந்த இடத்தில் அரசு திட்டத்தில் கீழ், வீடு கட்டி தருமாறு, 30க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்து இருக்கிறேன். இதுவரை மனு அளித்ததற்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விளக்கம் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் வீடு கட்டி தரப்படவில்லை.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.