ADDED : மே 11, 2026 03:35 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த சிந்தலவாடி பஞ்., மேல சிந்தலவாடி பஸ் ஸ்டாப் பகுதியில்
வாய்க்கால் படித்துறை செல்லும் சிமென்ட் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக,
வாய்க்கால் மற்றும் காவிரி படுகை பகுதிகளுக்கு மக்கள் நடந்து
செல்கின்றனர். கடந்த, இரண்டு நாட்களாக மழை பெய்ததால் இப்பகுதியில்
அதிகமான ஈரம் இருந்தது.
இந்நிலையில், படித்துறை சிமென்ட் சாலை
அருகே உள்ள மின்கம்பம் ஒன்று, நேற்று மதியம் சாய்ந்தது. அப்போது
மின்கம்பத்துடன் ஒயர்களும் அறுந்து விழுந்தன. உடனடியாக மின்
இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மின் பணியாளர்கள், மின்கம்பத்தை சீரமைக்கும்
பணியில் ஈடுபட்டிருந்தனர்.
