/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீயணைப்பு நிலையம் அவசியம் வேண்டும்
/
தீயணைப்பு நிலையம் அவசியம் வேண்டும்
ADDED : ஜூன் 20, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடவூர்: கரூர் அருகே, தரகம்பட்டியில் விவசாய தொழில், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது.
அப்பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. கடந்த, மூன்று ஆண்டுகளாக அரசு கலைக்கல்லுாரி செயல்படுகிறது. இந்நிலையில், தரகம்பட்டி பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், முசிறி அல்லது கரூரில் இருந்து தீயணைப்பு வாகனம் வந்து செல்லும் நிலை உள்ளது. அதற்குள், தீ விபத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தரகம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமை க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.