/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி
/
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த தொழிலாளி பலி
ADDED : மார் 04, 2024 11:44 AM
புளியம்பட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொட்டக்கொம்பை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன், 30, கூலி தொழிலாளி. தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சகோதரர் ராஜ்குமார், மற்றும் நண்பர்கள் சுதன், கார்த்திக் ஆகியாருடன், பவானிசாகர் அணைக்கு நேற்று முன்தினம் வந்தார்.
மேட்டுப்பாளையம் சாலையில் கீழ்பவானி வாய்க்காலில் தமிழ்செல்வன், சுதன் குளித்தனர். வாய்க்காலில் தற்போது, 2,300 கன அடி தண்ணீர் செல்கிறது. நீச்சல் தெரியாத நிலையில் இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இதைப்பார்த்த மற்ற நண்பர்கள் கூச்சலிடவே அக்கம்பக்கம் இருந்தவர்கள் சுதனை உயிருடன் மீட்டனர். ஆனால், தமிழ் செல்வன் மாயமானார்.
பவானிசாகர் போலீசார், சத்தி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் பணியை நிறுத்தி விட்டனர். நேற்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில், 100 மீட்டர் துாரத்தில் தமிழ் செல்வன் உடல் கரை ஒதுங்கியிருந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

