/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறக்கப்படாததால் சேதமடையும் நவீன ஆவின் பால் பூத்
/
திறக்கப்படாததால் சேதமடையும் நவீன ஆவின் பால் பூத்
ADDED : அக் 12, 2024 01:12 AM
திறக்கப்படாததால் சேதமடையும்
நவீன ஆவின் பால் பூத்
கரூர், அக். 12-
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் ஆவின் பால் உள்ளிட்ட, இதர பொருட்கள் விற்பனை செய்யும் வகையில், அமைக்கப்பட்ட நவீன பூத் திறக்கப்படாமல் உள்ளது.
கடந்த, 2021 மே, 7ல் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஆவின் பால் மற்றும் இதர பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன பூத்கள் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
நவீன பூத்துகளில் ஆவின் பால், நெய், பால் கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், ஆவின் பால் மூலம் டீ, காபி விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் மூலம், ஆவின் பொருட்கள் எளிதில், பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் நாள்தோறும், 6,500 லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது. நெய், பால்கோவா உள்ளிட்ட, 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விற்பனையாகிறது. இந்நிலையில், ஆவின் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில், 10 இடங்களில் புதிதாக ஆவின் பால், நவீன பூத்கள் அமைக்கும் பணிகள் நடந்தது. குறிப்பாக, கரூர் கலெக்டர் அலுவலகம், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம் மற்றும் கரூர் அரசு கலைக்கல்லுாரியில், ஆவின் பூத்கள் பல மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதில், தான்தோன்றிமலை பஞ்., யூனியன் அலுவலகம், கரூர் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலில், ஆவின் பூத்கள் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரூர் அரசு கலைக்கல்லுாரியில் அமைக்கப்பட்ட ஆவின் பால் பூத் திறக்கப்படவில்லை. இதனால், புதிதாக அமைக்கப்பட்ட ஆவீன் பூத் சேதம் அடையும் நிலையில் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் அரசு கலைக்கல்லுாரி, கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டது.
இதனால், கரூர் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஆவின் பூத்தை திறந்து, மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், தரமான பால் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.