தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்த எல்லைக்கோடு தேவை

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்த எல்லைக்கோடு தேவை

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்த எல்லைக்கோடு தேவை


ADDED : அக் 12, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 12, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் நகரில் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள ஜவஹர் பஜார், கோவை, தின்னப்பா கார்னர் சாலை மற்றும் லைட்ஹவுஸ் கார்னர் சாலைகளில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன.

இதனால், அந்த சாலைகளில் கார், டூவீலர், வேன் உள்ளிட்ட வாகனங்களை பொதுமக்கள், நீண்ட நேரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.இதனால் கரூர் நகர பகுதிகளில், நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்கும் வகையில், கரூர் நகரப்பகுதிகளில் கார் உள்ளிட்ட வாகனங்களை, ஒரு குறிப்பிட்ட எல்லை பகுதிகளில் நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில், சில மாதங்களுக்கு முன், சாலைகளில் பெயின்ட் மூலம் கோடுகள் வரையப்பட்டன.

தற்போது, அந்த கோடுகள் அழிந்துவிட்டன. இதனால், பொதுமக்கள் கார், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை, தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், கரூர் நகரப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, கரூர் நகர பகுதிகளில் முக்கிய சாலைகளில், புதிதாக வெள்ளைக்கோடு வரைந்து, வாகனங்களை முறையாக நிறுத்தும் வகையில், போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us