/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழையால் நிரம்பிய குளம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதியில் மழையால் நிரம்பிய குளம்
ADDED : செப் 12, 2025 01:22 AM
கிருஷ்ணராயபுரம, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, மழை நீர் சேமிப்பு குளம் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. இதனால் வயலுார், வேங்காம்பட்டி, புதுப்பட்டி, சிவாயம் ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள மழைநீர் சேமிப்பு குளம் நிரம்பி வழிந்தது. சில நாட்களுக்கு முன்பு, நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் குளத்தை பராமரிப்பு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையால் மழைநீர் முழுவதும் குளத்தில் நிரம்பியது. இதன் மூலம் இப்பகுதியில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.