/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பழைய தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்ய வேண்டுகோள்
/
பழைய தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்ய வேண்டுகோள்
ADDED : ஜன 20, 2024 07:15 AM
அரவக்குறிச்சி : வீடுகளை பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.பரமத்தி ஒன்றியத்தில், 30 ஊராட்சிகள் உள்ளன. ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். கூலி செய்து வரும் இவர்கள், தங்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டி தரக்கோரி, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் முறையிட்டனர்.
இதன் பயனாக ஊராட்சிகளில் உள்ள குக்கிராமங்களில் கான்கிரீட் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, ஏழை எளிய ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த தொகுப்பு வீடுகள் முறையாக கட்டப்படாததால், கட்டிய சில ஆண்டுகளிலேயே வீட்டின் உள்ளே மேற்கூரை சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தன.
தற்போது வீடுகள் மிகவும் மோசமாகி, குடியிருப்போர் வீடு இருந்தும் வாசலில் உறங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் தேங்கி நின்று குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, க.பரமத்தி ஒன்றியம் முழுவதும் உள்ள பழைய தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து, வீடுகளை பராமரிக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.