/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர் வார கலெக்டருக்கு கோரிக்கை
/
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர் வார கலெக்டருக்கு கோரிக்கை
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர் வார கலெக்டருக்கு கோரிக்கை
வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி தூர் வார கலெக்டருக்கு கோரிக்கை
ADDED : மார் 14, 2024 06:57 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, கொடிங்கால் வடிகால் வாய்க்கால், தென்கரை பாசன வாய்க்கால், சிவாயம் காட்டு வாரிகள் பல லட்சம் மதிப்பில் துார் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று வாய்க்கால்களும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. வாய்க்கால் இருபுறமும் உள்ள கரையில், தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பொது மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை துார் வாரும் பணி நடைபெறுகிறது.
இப்பணியை சரிவர செய்யாமல், அரசுக்கு கணக்கு காட்டுவதற்காகவே துார்வாரும் பணி நடைபெறுகிறது. வாய்க்காலின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி விட்டு, துார் வாரும் பணி செய்ய வேண்டும். மேலும், வாய்க்காலில் உள்ள இரண்டு கரைகளையும் பொது மக்கள், விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள், பொது மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.