/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
/
சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
சாலையை சேதப்படுத்தும் இயந்திரம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
ADDED : அக் 13, 2024 08:48 AM
குளித்தலை: கரூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் சார்பில், லட்சக்கணக்கான மதிப்பில் கிராம புற சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தார் சாலையில் உழவு பணிகள் மேற்கொள்ளும் டிராக்டர், பவர்டில்லர் வாகனங்கள் இரும்பு காஸ் வீல்களுடன் இயக்கப்படுவதால் சாலை சேதாரமாகிறது.
தினமும் குறைந்தபட்சம், நுாற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் இந்த தார் சாலையை
பயன்படுத்தி விவசாய பணிகளுக்காக செல்கின்றனர். காஸ் வீல்கள் சாலையில் சுற்றி செல்வதால்,
சாலையின் தரம் உடனடியாக குறைய வாய்ப்பு உள்ளது. சாலையில் சேதம் ஏற்பட காரணமான டிராக்டர்
உரிமையாளர்கள், டிரைவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால்,
லட்சக்கணக்கில் அரசு பணம் வீணாகிறது. மத்திய, மாநில அரசு அதிகாரிகள் புதிய தார் சாலை
பணிகள் குறித்து, தொடர் கண்காணிப்பு நடத்த வேண்டும்.