ADDED : செப் 16, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, அடர்ந்த காட்டு பகுதிகளில் வசிக்கும் முள் எலி பிடிபட்டது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், பாலுாட்டி இனத்தை சேர்ந்த முள் எலி அடர்ந்த காட்டு பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. அதை, ஆங்கிலத்தில் மெட்ராஸ் ெஹட்ஜ்ஷாக் என அழைக்கப்படுகிறது. பகலில் துாங்கும் முள் எலி, இரவில் உணவுக்காக பூச்சிகளை தேடி செல்லும்.
மனித இனம் மற்றும் மற்ற விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் போது, முள் எலி தனது உடலில் உள்ள முட்கள் மூலம், பாதுகாத்து கொள்ளும். மருத்துவ குணம் கொண்ட முள் எலி கொல்லப்படுவதால், எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், கரூர் மாவட்டம் வெள்ளியணையில், விவசாய தோட்டத்தில் நேற்று முள் எலி, செடிகள் நிறைந்த பகுதியில் காணப்பட்டது. அதை அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மீட்டு, கரூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.