/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரும்பு ஜூஸ் மிஷின் மீது பைக் மோதி வாலிபர் பலி
/
கரும்பு ஜூஸ் மிஷின் மீது பைக் மோதி வாலிபர் பலி
ADDED : நவ 03, 2024 02:23 AM
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, கரும்பு ஜூஸ் மிஷின் மீது பைக் மோதியதில் வாலிபர் இறந்தார்.
வேலாயுதம்பாளையம் அருகே, மரவாபாளையம் மதுரை வீரன் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 26. இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக, வேலாயுதம்பாளையம் அத்திக்காபள்ளம் நோக்கி பைக்கில் சென்றார். காந்திநகர் அருகே சென்றபோது, பைக் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த கரும்பு ஜூஸ் தயாரிக்கும் மிஷின் மீது மோதியது. இதில், தினேஷ்குமார் படுகாயம-டைந்தார். உடனே அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்-துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்-பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், தினேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.