/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நேர காப்பாளர் கூண்டு போக்குவரத்துக்கு இடையூறு
/
நேர காப்பாளர் கூண்டு போக்குவரத்துக்கு இடையூறு
ADDED : ஏப் 29, 2024 07:15 AM
குளித்தலை : குளித்தலை தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கடந்த, 10 மாதங்களுக்கு முன், 74 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடந்தது.
இதில், நிழற்கூடத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்டும் அறை, பஸ் நேர காப்பாளர் அறை கட்டப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து புதிதாக நிழற்கூடம், கரூர் மார்க்கம் செல்லும் பயணிகளுக்காக கட்டப்பட்டது. இந்த நிழற்கூடம் அருகே, அரசு பணிமனை சார்பில், நேர காப்பாளர் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நேர காப்பாளர் கூண்டால், நிழற்கூடத்துக்கு பஸ்கள் வந்துச்செல்ல இடையூறு ஏற்படுகிறது. கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் செல்லும்போது, நேர காப்பாளர் அறையில் மோதி பஸ் கண்ணாடி சேதம் ஏற்படுகிறது. அதனால், இந்த நேர காப்பாளர் அறையை, புதிய நிழற்கூடத்தில் ஒதுக்கப்பட்ட அறைக்கு மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

