/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
/
சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
ADDED : ஜன 22, 2024 12:08 PM
அரவக்குறிச்சி: நள்ளிரவில், பழைய சாக்கு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து, கரூருக்கு உபயோகப்படுத்தப்பட்ட சாக்கு பைகளை லாரியில் சுருட்டி மூட்டைகளாக கட்டி கொண்டு வரப்பட்டது. கரூர் மாவட்டம், மலைக்கோவிலுார் அருகே உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில், கரூர் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
நள்ளிரவில் லாரியில் தீப்பற்றியதால், அருகில் இருந்தவர்கள் அரவக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததால் மலைக்கோவிலுாரில் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.