/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நின்றிருந்த கார் மீது டூவீலர் மோதி ஒருவர் படுகாயம்
/
நின்றிருந்த கார் மீது டூவீலர் மோதி ஒருவர் படுகாயம்
நின்றிருந்த கார் மீது டூவீலர் மோதி ஒருவர் படுகாயம்
நின்றிருந்த கார் மீது டூவீலர் மோதி ஒருவர் படுகாயம்
ADDED : அக் 06, 2024 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே தொக்குப்பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ், 39. இவர், கரூர் சின்னதாராபுரம் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் ராஜபுரம் பிரிவு சாலை அருகே வந்தபோது, அப்பகுதியில் அரவக்குறிச்சி அருகே உள்ள கூடலுார் கிழக்கு, கொங்கு நகரை சேர்ந்த கார்மேகம், 52, என்-பவர் காரை எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் நிறுத்தி இருந்தார். இதனை கவனிக்காமல் சென்ற ஜெயராஜ், காரின் பின்னால் மோதினார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயராஜை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனு-மதித்தனர். சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.