/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு
/
அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே டூவீலரில் சென்றவர் லாரி மோதி உயிரிழப்பு
ADDED : ஜூலை 31, 2025 01:47 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, முன்னால் சென்ற டூவீலரின் பின்னால் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே கான்ட்ராக்டர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உச்சப்பட்டி இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன், 50. இவர், பெயின்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணியளவில் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், தனது ஸ்பிண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுார், கீழக்கடை பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் மகன் நவீன் குமார், 30, என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.
இவரது வாகனம் அரவக்குறிச்சி அருகே உள்ள, தடாகோவில் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜேந்திரனின் மனைவி மரியலோஜினி, கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.