/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருவீதி உலா
/
அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் திருவீதி உலா
ADDED : மே 05, 2025 02:16 AM
கரூர்: கரூர், அபயபிரதான ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவி-ழாவில், நேற்று மூன்றாவது நாளாக உற்சவர் திருவீதி உலா நடந்-தது.
பிரசித்தி பெற்ற, அபயபிரதான ரெங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நடப்பாண்டு கடந்த, 2ல் கொடியேற்றத்துடன், சித்திரை திருவிழா தொடங்கி-யது. பிறகு, நாள்தோறும் உற்சவர் சுவாமி திருவீதி உலா நடந்து வருகிறது. நேற்று மாலை அனுமந்த வாகனத்தில், உற்சவர் ரெங்க-நாதர் சுவாமியின் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்-தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.வரும், 8ல் திருக்கல்யாண உற்சவம், 10ல் தேரோட்டம், 11ல் அமராவதி ஆற்றில் தீர்த்தவாரி, 12ல் ஆளும் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநி-லையத் துறை உதவி ஆணையர் ரமணி காந்தன், செயல் அலு-வலர் இளையராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.
லாலாப்பேட்டை மண்டியில்
வாழைத்தார்கள் விற்பனை
கிருஷ்ணராயபுரம், மே 5
லாலாப்பேட்டை, ஏலம் கமிஷன் மண்டியில் வாழைத்தார்கள் ஏலத்தில் விற்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதியில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை ஏலம் கமிஷன் மண்டிகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று பூவன் வாழைத்தார், 300 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.