/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
/
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
ADDED : மார் 22, 2024 07:04 AM
கரூர் : வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2023ல், கார்த்திக், 39, என்பவர் மீது, போடப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை, கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில், புலன் விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார், நேற்று ஆஜராகி சாட்சியம் அளிக்க, நீதிமன்றம் மூலம் வாய்தா தேதி அனுப்பப்பட்டது.ஆனால் இன்ஸ்பெக்டர் விதுன் குமார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு, 'இன்ஸ்பெக்டர் விதுன் குமாருக்கு பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் விதுன் குமார், தற்போது திருச்சி தில்லை நகர், போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வருகிறார்.