/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நீர்தொட்டி
/
திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் நீர்தொட்டி
ADDED : ஜூன் 09, 2025 04:24 AM
கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் பஞ்., வடக்கு ஆதிதிராவிடர் காலனியில், 50 குடும்பங்களில், 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த, 2024ம் ஆண்டு, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்-தொட்டி, 16.23 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்து மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்த பின், காவிரி கூட்டுக்குடிநீர் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்-தனர். குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இப்பகுதி மக்கள் போதுமான அளவில் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்-றனர். இத்தொட்டியை திறந்து சீரான காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.