/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சுமை துாக்கும் தொழிலாளி தவறி விழுந்து பரிதாப பலி
/
சுமை துாக்கும் தொழிலாளி தவறி விழுந்து பரிதாப பலி
ADDED : மே 22, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் கரூரில், லாரி பார்சல் அலுவலகத்தில் தவறி விழுந்த, சுமை துாக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.கிருஷ்ணராயபுரம், சேங்கல் தெற்கு பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார், 34; இவர், கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள லாரி பார்சல் அலுவலகத்தில், லோடு மேனாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 18ல் பார்சல் அலுவலகத்தில் படியில் ஏற முயன்ற, செந்தில் குமார் தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் படுகாயமடைந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் குமார் உயிரிழந்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.