ADDED : டிச 29, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், டிச. 29-
கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் முருகன் நகர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து மனைவி ரேவதி, 52; இவர் கடந்த, 27ல் குடும்ப பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் ரேவதி செல்ல வில்லை. ரேவதியின் உறவினர் கார்த்திக், போலீசில் புகார் அளித்துள்ளார்.
க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.