/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பேக்கரி கடையில்பாம்பு போல ஊர்ந்து சென்று திருடிய வாலிபர்
/
பேக்கரி கடையில்பாம்பு போல ஊர்ந்து சென்று திருடிய வாலிபர்
பேக்கரி கடையில்பாம்பு போல ஊர்ந்து சென்று திருடிய வாலிபர்
பேக்கரி கடையில்பாம்பு போல ஊர்ந்து சென்று திருடிய வாலிபர்
ADDED : நவ 18, 2025 01:22 AM
கரூர், கரூர் அருகே, பேக்கரி கடையின் ஷட்டரை ஒரு பக்கம் திறந்து, பாம்பு போல ஊர்ந்து சென்று திருடிய, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்-திருச்சி சாலை காந்தி கிராமம் டபுள் டேங்க் பகுதியில் பேக்கரி உள்ளது. அங்கு கடந்த, 15ல் அதிகாலை, 30 வயதுள்ள அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், பேக்கரியின் ஷட்டரை ஒரு பக்கம் மட்டும் திறந்துள்ளார்.
பிறகு, பாம்பு போல படுத்து ஊர்ந்து, பேக்கரிக்குள் புகுந்துள்ளார். பின், டேபிளில் இருந்த சில்லரை காசுகள் மற்றும் சில பொருட்களை திருடி சென்று அங்கிருந்து தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. பசுபதிபாளையம் போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.