ADDED : பிப் 10, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
கரூர்; வெள்ளியணை அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை லிங்கத்துார் பகுதியை சேர்ந்த பழனியப்பன் மகன் மோகன்ராஜ், 40; இவர், உடல் நலம் பாதிக்கப்-பட்டு, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நி-லையில் கடந்த, 2ல் கட்டிலில் துாங்கி கொண்டி-ருந்த மோகன்ராஜ், தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து, மோகன்ராஜ் சகோதரர் முருகேசன், 50, அளித்த புகார்படி, வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மக்கள் குறைதீர் கூட்டம்
