ADDED : செப் 30, 2026 05:56 AM

அ நிறம் | அளவு
கரூர்; அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், அமராவதி ஆற்றில் ஆரத்தி விழா, நேற்று இரவு நடந்தது.
அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில், அமராவதி ஆற்றுப்பகுதிகளில், நதி வளம் பெரு-கவும், உலக நன்மைக்காகவும் ஆரத்தி விழா நடந்து வருகிறது. நேற்று இரவு கரூர் அருகே பசுப-திபாளையம் அமராவதி ஆற்றில், ஆரத்தி விழா நடந்தது.அதில், சாதுக்கள், சன்னியாசிகள், யோகிகள், பொதுமக்கள் அமராவதி ஆற்றில் மலர் துாவி, ஆரத்தி எடுத்து வழிப்பட்டனர். நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட சன்னியாசிகள் சங்க பொருளாளர் கற்ப-காம்பாள் உள்பட, பலர் பங்கேற்றனர்.
