தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்

கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்

கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றம்


ADDED : டிச 02, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2025 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் கைவிடப்பட்ட தனியார் கிணற்றை மூடாததால், கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது.

கரூர் மாநகராட்சியை ஒட்டி, பல பகுதிகளில் விவசாயம் நடந்து வந்தது. அங்கு, கிணறுகள் மூலம் பாசன செய்து வந்தனர். தற்போது நகரமயமாக்கல் காரணமாக, வயல்கள் பெரும்பாலும் பிளாட் போட்டு விற்கப்பட்டுள்ளது. ஏராளமான குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு, கைவிடப்பட்ட தனியார் கிணறுகள் பல உள்ளன. பாதுகாப்பற்ற முறையில் கிணறுகள் திறந்து கிடக்கிறது. கிணற்றை மூடாதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடும் போது, தவறிவிழும் அபாயம் இருக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. நீண்டகாலமாக கிணறுகள் திறந்த நிலையிலேயே மூடப்படாமல் காணப்படுகிறது. எனவே குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இது சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us