/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து
/
வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து
வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து
வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் அருகே கனரக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து
ADDED : ஜன 29, 2024 12:42 PM
கரூர்: வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் அருகே, கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கரூர் அடுத்த வெள்ளியணையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அதன் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்படுகிறது. அதில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி எதிரே, வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கு, வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இல்லை. இதனால், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது:
போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வருபவர்கள், வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், வாகன சோதனையில் பிடிபடும் லாரி போன்ற கனரக வாகனங்களும் போலீஸ் ஸ்டேஷனையொட்டி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், எதிரில் உள்ள பள்ளிக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இந்த இடத்தில் மூன்று பிரிவு சாலைகள் இருப்பதால், கனரக வாகனங்களை நிறுத்தும்போது, திரும்பும் வண்டிகளுக்கு எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர், சமையல் கூடம் பள்ளி எதிரில் உள்ளது. அங்கு செல்ல பிரிவு சாலையை கடந்து செல்ல வேண்டும். அப்போது, மின்னல் வேகத்தில் வரும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி துவங்கும் நேரம், உணவு இடைவேளை, முடியும் நேரங்களில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி ஆசிரியர்கள் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனை போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாகனங்கள் நிறுத்த மாற்று இடத்தை தேர்வு செய்வதோடு, சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.