/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்
/
திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்
திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்
திருச்சி சாலையில் சென்டர் மீடியன் இடைவெளியால் விபத்து அபாயம்
ADDED : பிப் 14, 2025 07:16 AM
கரூர்: கரூர்--திருச்சி சாலையில், சென்டர் மீடியன் இடைவெளியை கடந்து செல்லும் பாதசாரிகளால் விபத்து அபாயம் காத்திருக்கிறது.
கரூர்--திருச்சி நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சுங்ககேட், காந்திகிராமம் ஆகிய இடங்களில் வணிக நிறுவனங்கள் உள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் நோக்கில், திருமாநிலையூரில் இருந்து காந்திகிராமம் வரை, சாலை நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
காலை, மாலை நேரங்களில் ஏராளமான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள பிரிவு சாலையை கடக்கும் போது, சென்டர் மீடியன் இடத்தில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது என புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு சாலையை கடக்க வசதியாக, சென்டர் மீடியன் நடுவில் கான்கிரீட் கற்களை அகற்றி விடுகின்றனர். இதனால், பாதசாரிகள் கடந்து செல்லும் போது, விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. அதிலும், கரூர் திருமாநிலையூர் பகுதியில் சென்டர் மீடியனில் உள்ள கல்லை அகற்றி உள்ளனர். அதன் வழியாக மக்கள் தாண்டி செல்கின்றனர்.
இரவு நேரங்களில் சென்டர் மீடியனை தாண்டி செல்லும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக சென்டர்மீடியன் இடைவெளியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.