/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேகத்தடைகளில் வெள்ளைகோடு இல்லாததால் தொடரும் விபத்து
/
வேகத்தடைகளில் வெள்ளைகோடு இல்லாததால் தொடரும் விபத்து
வேகத்தடைகளில் வெள்ளைகோடு இல்லாததால் தொடரும் விபத்து
வேகத்தடைகளில் வெள்ளைகோடு இல்லாததால் தொடரும் விபத்து
ADDED : அக் 05, 2025 01:28 AM
கரூர், கரூரில் உள்ள பல சாலைகளில், வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு இல்லாததால் விபத்துகள் நடந்து வருகின்றன.
சாலை விபத்துகளை தவிர்க்க சாலைகளை பராமரிப்பதும், மேம்படுத்துவதும் அவசியமாகும். வாகன ஓட்டிகள் எதையும் முன்னெச்சரிக்கையாக தெரிந்து கொள்ள போக்குவரத்து சிக்னல்கள், அறிவிப்புகள், ரிப்ளக்டர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை ஒழுங்காக வைக்கவில்லை எனில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாகும். சாலையை பராமரிக்க மத்திய, மாநில அரசுகள் அதிக நிதியை ஒதுக்குகின்றன.
சாலைகளை பராமரிக்க சாலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தனை இருந்தும் கரூர் மாவட்டத்தில் சாலைகள் பராமரிப்பில், மாநில நெடுஞ்சாலைத்துறை சுணக்கமாகவே உள்ளன. மாவட்டம் முழுவதும் ஏராளமான சாலைகளில் பள்ளி, மருத்துவமனை, திருப்பங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளில் வெள்ளை கோடு அடிக்காமல் விட்டுள்ளனர். பல இடங்களில் அடித்த வெள்ளை கோடு மறைந்து விட்டன. இதனால், வேகத்தடை இருப்பது தெரியாமல் ஏராளமான விபத்துக்கள் நடந்து வருகின்றன.
எனவே, மாவட்டத்தில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலைத்துறை, கிராம சாலைகள் திட்டம் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடைகளில் வெள்ளைக்கோடு அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.