/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவில் திருட்டில் ஈடுபட்ட பழங்குற்றவாளி கைது
/
கோவில் திருட்டில் ஈடுபட்ட பழங்குற்றவாளி கைது
ADDED : மார் 28, 2024 07:04 AM
ஈரோடு : ஈரோட்டில், கோவில் திருட்டில் ஈடுபட்ட பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 35. நேற்று முன்தினம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் உள்ள, வலம்புரி விநாயகர் கோவில் திருட்டில் ஈடுபட்டவர் என்பதை, 'சிசிடிவி' கேமரா பதிவு மூலம் உறுதிபடுத்திய போலீசார், டாஸ்மாக் பாரில் மது குடித்து கொண்டிருந்த பாலாஜியை பிடித்து கைது செய்தனர். விசாரணையில், கோவிலில் திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் கொல்லம்பாளையத்தில் உள்ள பழமுதிர் நிலையம், பாஸ்ட்புட் கடைகள், பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து திருடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர் மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருட்டு போன பொருட்கள் எதையும், பாலாஜியிடம் இருந்து மீட்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.