/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம கூட்டுறவு வங்கிகளிலேயே சிபில் ஸ்கோர் பார்க்க நடவடிக்கை தேவை
/
கிராம கூட்டுறவு வங்கிகளிலேயே சிபில் ஸ்கோர் பார்க்க நடவடிக்கை தேவை
கிராம கூட்டுறவு வங்கிகளிலேயே சிபில் ஸ்கோர் பார்க்க நடவடிக்கை தேவை
கிராம கூட்டுறவு வங்கிகளிலேயே சிபில் ஸ்கோர் பார்க்க நடவடிக்கை தேவை
ADDED : ஜூலை 06, 2025 01:44 AM
அரவக்குறிச்சி, திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு சென்று, சிபில் ஸ்கோர் பார்க்க காலதாமதமாவதால், அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம கூட்டுறவு வங்கிகளிலேயே பார்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களின் கடன் செலுத்தும் திறனுக்கேற்ப, மேலும் கடன் பெற வேண்டுமென்றால் சிபில் ஸ்கோர் பார்ப்பது வழக்கம். இந்நிலையில், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள, கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோர் பார்ப்பதற்கு விவசாயிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சிபில் ஸ்கோர் பார்ப்பதற்காக, திருச்சி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நேர விரயமும், விவசாயிகள் கடன் பெறுவதற்கு நீண்ட காத்திருப்பும் ஏற்படுகிறது.
இது குறித்து, கரூர் மாவட்ட விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம், குடகனாறு பாதுகாப்பு சங்க செயலாளர் ஈசநத்தம் செல்வராஜ் கூறியதாவது:
வேளாண் பயிர்க்கடன் மட்டுமின்றி, கறவை மாட்டு பராமரிப்பு கடன், உழவு இயந்திரங்கள் என, 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கினால் நபார்டு வங்கி வழிகாட்டுதல்படி, 'சிபில் ஸ்கோர்' பார்த்து கடன் வழங்குவது சாத்தியமே இல்லை. வேளாண் சார்ந்த தொழில்களுக்கு, 'சிபில் ஸ்கோர்' பார்க்க வேண்டுமென்றால், எந்த விவசாயியும் கடன் பெற தகுதியில்லாதவர் என்று தான் கூற வேண்டும்.
விவசாயிகள் கடன் பெற சிபில் ஸ்கோரை, அந்தந்த கிராம கூட்டுறவு வங்கிகளில் பார்க்காமல், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பார்ப்பதால், நேர விரயமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்த நடைமுறையை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.