ADDED : மே 24, 2026 05:30 AM
அ நிறம் | அளவு
குளித்தலை குளித்தலை அடுத்த நங்கவரம் டவுன் பஞ்., கோவிந்தனுார், அனஞ்சனுார், குறிச்சி, நச்சலுார் தாட்கோ காலனி, புதுப்பாளையம், ஐயப்பன் கோவில் பகுதி, ஆண்டிப்பட்டி, புரசம்பட்டி செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் முட்செடிகள், கொடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளன.
இதனால் அந்த வழியே சென்றவர்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து, சாலையோரம் வளர்ந்திருந்த முட் செடிகளை வெட்டி துாய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
