/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை இருபுறமும் முள் செடி அகற்ற நடவடிக்கை தேவை
/
சாலை இருபுறமும் முள் செடி அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : நவ 11, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், வரகூர் சாலையின் இருபுறமும், வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர் முதல் சரவணபுரம் வரை, தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக சரவணபுரம், வயலுார், பஞ்சப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் செல்கின்றனர். தற்போது சாலையின் இருபுறமும், முள் செடிகள் வளர்ந்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். சாலை வழியாக இரு வாகனங்கள் வரும் போது, ஒதுங்க முடியாத நிலை உள்ளது. எனவே, முள் செடிகளை வெட்டி அகற்ற பஞ்சசாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

