/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி பகுதியில் ஆடுகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை
/
அரவக்குறிச்சி பகுதியில் ஆடுகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை
அரவக்குறிச்சி பகுதியில் ஆடுகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை
அரவக்குறிச்சி பகுதியில் ஆடுகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை
ADDED : ஆக 14, 2025 02:15 AM
அரவக்குறிச்சி, வெறிநாய் கடி மற்றும் நோய் தொற்றிலிருந்து செம்மறி ஆடுகளை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், ஏராளமான விவசாயிகள் மானாவாரி விவசாயத்திற்கு மாறினர். இப்பகுதியில், முருங்கை சாகுபடி ஓரளவு கை கொடுத்து வந்தது. கல்குவாரிகள் அதிகரித்ததால், பாதி விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்திற்காக செம்மறி ஆடுகள் வளர்ப்பிற்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளாக, வெறிநாய்கள் கடித்து நுாற்றுக்கணக்கான ஆடுகள் இறந்துள்ளன. ஆடுகளை பாதுகாப்பதற்காக, அரவக்குறிச்சியில் தற்போது ஆடு வளர்க்கும் விவசாயிகள், பரண் அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளனர். ஆடுகளுக்கு என்று தனியாக செம்மறி ஆட்டு பரண் அமைப்பதால், மேலே ஆடுகள் சென்று தங்குவதால் வெறிநாய்கள் தொல்லை மற்றும் நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கும். ஆட்டு கழிவுகளில் இருந்து ஆண்டுக்கு ஒரு முறை உரங்கள் கிடைக்கிறது. மத்திய, மாநில அரசுகள் செம்மறி ஆடு வளர்க்கும் விவசாயிகளை பாதுகாப்பதற்காக, மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.